விவசாயிகள் அனைவரும் ட்ரோன்கள் பயன்படுத்த தொடங்கும்போது, ட்ரோன்களுக்கு மானியம் வழங்குவது குறித்து மத்திய அரசு முடிவு செய்யும் என வேளாண்மை துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.
தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் தகவல் தொழில்நுட்பம் மற்றும் புவியியல்
துறை, ICR அட்டாரி திட்டத்தின் மூலமாக ட்ரோன் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி
தஞ்சை மாவட்டத்தில் நடைபெற்றது. ட்ரோன் மூலம் இடுப்பொருட்களை அளிப்பது
தொடர்பான விளக்கம் விவசாயிகளுக்கு அளிக்கப்பட்டது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
தஞ்சை மாவட்டத்தின் வேளாண்மை இயக்குனர் மற்றும் உதவி இயக்குனர், வேளாண் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி வல்லுனர்கள் இத்திட்டத்தை பற்றி விவசாயிகளுக்கு எடுத்துரைத்தனர்.
விவசாயிகளுக்கு வேளாண் இடுபொருள்களை ட்ரோன் மூலம் தெளிப்பது குறித்து
விழிப்புணர்வு ஏற்படுத்தி அதன் மூலம் வரும் காலங்களில் மத்திய மாநில அரசுகள்
மானிய விலையில் ட்ரோன்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். தற்போது
விவசாயத்தில் ஆள்பற்றாக்குறை நிலை என்பது உள்ளது.
அதனால் மகசூல் இழப்பு என்பது உலக அளவில் உள்ளதாகவும். அதனை போக்கும்
வகையில் இது போன்ற நவீன இயந்திரங்கள் தேவைப்படுவதாகவும் தெரிவித்தார். ஆட்கள்
மூலம் உரம் தெளிக்கும் போது இரண்டு நாட்கள் ஆகும், மேலும் 1500 ரூபாய் வரை
கூலி செலவு ஏற்படும்.
ஆனால் ட்ரோன் மூலம் உரம் தெளிக்கும்போது 8 நிமிடங்களில் அந்த பணிகள் முடிந்து விடும், ஏக்கருக்கு 500 முதல் 900 ரூபாய் மட்டுமே விவசாயிகளுக்கு செலவு ஏற்படும் என தெரிவித்தார். தற்போது மானியத்தில் ட்ரோன் வழங்குவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை, விவசாயிகள் அனைவரும் ட்ரோன்கள் பயன்படுத்த தொடங்கும்போது மானியம் வழங்குவது குறித்து மத்திய அரசு முடிவு செய்யும் என அவர் தெரிவித்தார்.