2023ம் ஆண்டுக்கான ஐபில் மினி ஏலத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் அஜிங்கியா ரஹானேவை சென்னை அணி ரூ.50 லட்த்திற்கு ஏலத்தில் எடுத்துள்ளது.
16-வது ஐபிஎல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு ஏப்ரல்- மே மாதங்களில் நடக்கிறது. இதையொட்டி 10 அணிகள் மொத்தம் 163 வீரர்களை தக்க வைத்துக் கொண்டன. 85 வீரர்கள் விடுவிக்கப்பட்டனர். இந்த நிலையில் விடுவிக்கப்பட்ட வீரர்களுக்குரிய இடத்தை நிரப்புவதற்காக ஐபிஎல் வீரர்களுக்கான மினி ஏலம் கேரள மாநிலம் கொச்சியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் இன்று நடந்தது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
ஐபிஎல் தொடரில் 10 அணிகளும் வைத்திருக்கும் இருப்புத் தொகைகள்:
சென்னை சூப்பர் கிங்ஸ் – 20.45 கோடி
டெல்லி கேப்பிடல்ஸ் – ₹19.45 கோடி
குஜராத் டைட்டன்ஸ் – ₹19.25 கோடி
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – ₹7.05 கோடி
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் – ₹23.35 கோடி
மும்பை இந்தியன்ஸ் – ₹20.55 கோடி
பஞ்சாப் கிங்ஸ் – ₹32.2 கோடி
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் – 8.75 கோடி
ராஜஸ்தான் ராயல்ஸ் – ₹13.2 கோடி
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் – ₹42.25 கோடி
இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் ஹாரி புரூக், சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியால் 13.25 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டார். அவரது அடிப்படை விலை 1.5 கோடிக்கு தொடங்கிய நிலையில், ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சன் ரைசர்ஸ் அணிகளுக்கு இடையே போட்டி நிலவிய நிலையில், சன் ரைசர்ஸ் அணி அணி 13.25 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டார்.
நியூசிலாந்து அணியின் கேன் வில்லியம்சன் குஜராத் டைட்டன்ஸ் அணியால் ரூபாய் 2 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டார். கடந்த 8 வருடங்களாக சன் ரைசர்ஸ் அணியில் விளையாடி வந்த நிலையில், இந்த சீசனில் அவர் அந்த அணியால் விடுவிக்கபட்ட நிலையில், முதல் ஏலமாக குஜராத் அணிக்காக கேன் வில்லியம்சன் வாங்கபட்டார்.
இந்திய அணியின் மயங்க் அகர்வால் சன் ரைசர்ஸ் அணியால் ரூபாய் 8.25 கோடிக்கு ஏலம் எடுக்கபட்டார். அவரது ஆரம்ப விலையானது ரூபாய் 1 கோடிக்கு தொடங்கியது. கடந்த தொடரில் பஞ்சாப் அணிக்காக மயங்க் விளையாடினார்.
அஜிங்கியா ரஹானே சென்னை அணியால் ரூபாய் 50 லட்சத்திற்க்கு ஏலம் எடுக்கப்பட்டார்.
இங்கிலாந்து அணியின் ஜோ ரூட் எந்த அணியாலும் ஏலத்தில் எடுக்கப்படவில்லை