பரந்தூர் விமான நிலையத்தை அமைக்கவிடமாட்டோம் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
முன்னாள் அமைச்சரான கக்கனின் நினைவு நாளை முன்னிட்டு நாம் தமிழர் கட்சியின் சார்பில் போரூரில் உள்ள நாம் தமிழர் கட்சி தலைமை அலுவலகத்தில் கக்கனின் உருவப்படத்திற்கு அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
அதனை தொடர்ந்து பத்திரிகையாளர்கள் சந்தித்த சீமான், தமிழகத்தில் உள்ள காப்பு காடுகளை சுற்றி கனிம வளங்களை எடுக்க எதிர்ப்பு தெரிவிக்கிறோம். அதனை நடத்த விடமாட்டோம். இதனை எதிர்த்து போராடுவோம். ரம்மி விளையாட்டை தடை செய்யவும், மக்களின் நலன் காக்கவும் ஆளுநர் கையெழுத்து போடவில்லை என்றால், எதற்கு ஆளுநர் பதவி என்று சீமான் கேள்வி எழுப்பினார்.

தொடர்ந்து பேசியஅவர், தமிழக அரசு அறிவித்துள்ள பொங்கல் பரிசை அவமானமாக கருதுகிறேன். 50 ஆண்டுகளாக கொத்தடிமைகளை உருவாக்கி வைத்துள்ளனர். அரசே தங்கலீசை உருவாக்குகிறது. நான் காசு கொடுத்து பள்ளியை நடத்த வேண்டுமானால் அரசு எதற்காக உள்ளது. நம்ம ஸ்கூல் பவுண்டேசன் என்ற திட்டமே கேவலமானது.
பாஜகவிற்கு மக்கள் பிரச்சினை பற்றி பேச தகுதி இல்லை. நாடாளுமன்ற தேர்தலுக்கு நாங்கள் தயாராக உள்ளோம். சென்னையில் பரந்தூர் விமான நிலையம் அமையவிட மாட்டோம் என தெரிவித்தார்.







