சுப்மன் கில் அசத்தல் சதம்… – சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு 189 ரன்கள் இலக்கு!!

ஐபிஎல் 2023 கிரிக்கெட் தொடரில், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி 188 ரன்கள் எடுத்துள்ளது. ஐபிஎல் தொடரின் 16வது சீசன் கோலாகலமாகத் தொடங்கி நடைபெற்று வருகிறது. மொத்தம் 10…

ஐபிஎல் 2023 கிரிக்கெட் தொடரில், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி 188 ரன்கள் எடுத்துள்ளது.

ஐபிஎல் தொடரின் 16வது சீசன் கோலாகலமாகத் தொடங்கி நடைபெற்று வருகிறது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்றுள்ள இந்த தொடரில், ஒவ்வொரு அணியும் போட்டிகளில் வெற்றி பெற தீவிரம் காட்டி வருகின்றன. அந்த வகையில், அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்று வரும் போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியுடன் குஜராத் டைட்டன்ஸ் அணி மோதுகிறது.

இதில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய குஜராத் டைட்டன்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர் சாஹா டக் அவுட் ஆகி ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தார். இதையடுத்து கைகோர்த்த சுப்மன் கில் – சாய் சுதர்ஷன் ஜோடி, அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

பந்துவீச்சாளர்களை கதிகலங்கச் செய்த சுப்மன் கில் 58 பந்துகளில் 101 ரன்கள் எடுத்து அசத்தினார். மற்றொரு புறம் சாய் சுதர்ஷன் 36 பந்துகளில் 47 ரன்கள் விளாசினார். அதன்பின்னர் களமிறங்கிய பேட்ஸ்மேன்கள் அனைவரும் சோற்ப ரன்களில் வெளியேற, குஜராத் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 188 ரன்கள் குவித்தது.

இதையும் படியுங்கள் : ”பிச்சைக்காரன் 2 படத்தை இயக்க எனக்கு விருப்பம் இல்லை” – விஜய் ஆண்டனி

20வது ஓவரை வீசிய சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் புவனேஷ்வர் குமார் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இதையடுத்து 189 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி களமிறங்கி விளையாடி வருகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.