மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சுப்மன் கில் வீடு திரும்பினார்!

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் ஆப்கன் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சுப்மன் கில் பங்கேற்பாரா என்பது குறித்து பிசிசிஐ அப்டேட் வெளியிட்டுள்ளது. இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேனாக சுப்மன் கில் ரசிகர்களால் அங்கீகரிக்கப்படுகிறார். அவர் இந்த…

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் ஆப்கன் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சுப்மன் கில் பங்கேற்பாரா என்பது குறித்து பிசிசிஐ அப்டேட் வெளியிட்டுள்ளது.

இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேனாக சுப்மன் கில் ரசிகர்களால் அங்கீகரிக்கப்படுகிறார். அவர் இந்த உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியின் வெற்றிகளில் முக்கிய பங்கு வகிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. மேலும் சுப்மன் கில் இந்திய அணியில் பங்கேற்பது, அணிக்கு பெரும் பலம் எனவும் கருதப்படுகிறது.

ஆனால் எதிர்பாராத விதமாக உடல்நல குறைவால் கில் பாதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு டெங்கு காய்ச்சல் ஏற்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகின. இதன் காரணமாக அவரால் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் போட்டியில் இந்திய அணியில் அவர் இடம்பெறவில்லை.

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இந்த ஆட்டத்தில் இந்திய அணி சற்று தடுமாற்றத்துடன் வெற்றி பெற்றது. கில் இல்லாத சூழலில் இஷான் கிஷனுக்கு விளையாட வாய்ப்பு அளிக்கப்பட்டது. இந்த போட்டியில் 2 ரன்களில் இந்திய அணி முதல் 3 விக்கெட்டுகளை இழந்திருந்தது. இதன்பின்னர் விராட் கோலி மற்றும் கே.எல்.ராகுல் ஏற்படுத்திய பார்ட்னர்ஷிப் காரணமாக இந்தியா வெற்றி பெற்றது.

இந்நிலையில் ஆப்கன் அணிக்கு எதிராக புதன் அன்று நடைபெறவுள்ள போட்டியில் சுப்மன் கில் பங்கேற்பாரா என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர். ஆனால் உடல் நலம் முழுமையாக குணம் அடையாததால், கில் இந்த போட்டியிலும் பங்கேற்க மாட்டார் என்று பிசிசிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் சிகிச்சை பெற்று வந்த இந்திய கிரிக்கெட் வீரர் சுப்மன் கில் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளதாகவும், அவரது உடல் நிலையை மருத்துவர்கள் கண்காணித்து வருவதாகவும் பிசிசிஐ தெரிவித்திருந்தது. இரத்தத்தில் பிளேட்லெட் எண்ணிக்கை சற்று குறைந்ததை அடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது.

மேலும் கில்  குணமாக இன்னும் சில வாரங்கள் எடுக்கக் கூடும் எனவும், எதிர்பார்க்கப்படுகிறது. எனவே இந்தியா, ஆப்கான் அணிகளுக்கு இடையேயான நாளை போட்டி மற்றும் அதற்கு பின்னதாக நடைபெறவுள்ள இந்தியா, பாக் இடையேயான போட்டிகளிலும் அவர் பங்கேற்க மாட்டார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் சுப்மன் கில் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் நாளை நடைபெறவுள்ள போட்டியில் அவர் கலந்துகொள்ள மாட்டார் என்பதே அனைவரின் கவலைக்கும் காரணமாக உள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.