Skip to content
January 02, 2026
News7 Tamil

News7 Tamil

பொறுப்பும் பொதுநலனும்
News7 Tamil
  • Home
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • LiveT V
News7 Tamil
  • முக்கியச் செய்திகள்
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • ஆசிரியர் தேர்வு
  • கட்டுரைகள்
  • தொழில்நுட்பம்
  • சினிமா
  • வேலைவாய்ப்பு
  • விளையாட்டு
  • Fact Check Stories
  • முக்கியச் செய்திகள்
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • ஆசிரியர் தேர்வு
  • கட்டுரைகள்
  • தொழில்நுட்பம்
  • சினிமா
  • வேலைவாய்ப்பு
  • விளையாட்டு
  • Fact Check Stories
News7 Tamil
  • முக்கியச் செய்திகள்
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • ஆசிரியர் தேர்வு
  • கட்டுரைகள்
  • தொழில்நுட்பம்
  • சினிமா
  • வேலைவாய்ப்பு
  • விளையாட்டு
  • Fact Check Stories
sortd
Home » important news » 5th set of account details of indians given by swiss bank to central govt
முக்கியச் செய்திகள் உலகம் இந்தியா செய்திகள்

இந்தியர்களின் கணக்கு விவரங்கள் அடங்கிய 5வது தொகுப்பு – மத்திய அரசிடம் வழங்கிய ஸ்விஸ் வங்கி.!

ஸ்விட்சர்லாந்து வங்கிகளில் உள்ள இந்தியர்களின் கணக்கு விவரங்கள் அடங்கிய 5-ஆவது தொகுப்பை   இந்தியாவிடம் ஸ்விஸ் பங்கி பகிர்ந்துள்ளது. வருடாந்திர தானியங்கி தகவல் பரிமாற்ற ஏற்பாட்டின் கீழ், ஸ்விட்சர்லாந்து வங்கிகளில் உள்ள சுமார் 36 லட்சம்…

Author Avatar

Web Editor

October 10, 202311:15 am AccountSwiss bankUnion Governmernt

ஸ்விட்சர்லாந்து வங்கிகளில் உள்ள இந்தியர்களின் கணக்கு விவரங்கள் அடங்கிய 5-ஆவது தொகுப்பை   இந்தியாவிடம் ஸ்விஸ் பங்கி பகிர்ந்துள்ளது.

வருடாந்திர தானியங்கி தகவல் பரிமாற்ற ஏற்பாட்டின் கீழ், ஸ்விட்சர்லாந்து வங்கிகளில் உள்ள சுமார் 36 லட்சம் கணக்குகள் குறித்த விவரங்கள் 104 நாடுகளிடம் பகிரப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக, அந்நாட்டு வங்கிகளில் உள்ள இந்தியர்களின் கணக்கு விவரங்கள் அடங்கிய 5-ஆவது தொகுப்பை இந்தியாவிடம் ஸ்விட்சர்லாந்து வழங்கியுள்ளது.

ஸ்விட்சர்லாந்து வங்கிகளில் உள்ள இந்தியர்களின் கணக்கு விவரங்களை ஸ்விஸ் வங்கி வழங்கியது தொடர்பாக மத்திய அரசு தெரிவித்துள்ளதாவது..

இந்தியாவிடம் பகிரப்பட்டுள்ள விவரங்களில், ஸ்விட்சர்லாந்து வங்கிகளில் உள்ள நூற்றுக்கணக்கான கணக்குகள் இடம்பெற்றுள்ளன. அந்த வங்கிகளில் இந்தியாவை சேர்ந்த சில தனிநபர்கள் பல கணக்குகள் வைத்துள்ளனர். பெரு நிறுவனங்கள் மற்றும் அறக்கட்டளைகளும் பல கணக்குகள் வைத்துள்ளன. அதுகுறித்த தகவல் அந்த விவரங்களில் இடம்பெற்றுள்ளன.

ஸ்விஸ் வங்கி கொடுத்துள்ள விவரங்களில் ஸ்விட்சர்லாந்து வங்கிகளில் கணக்கு வைத்திருப்போரின் பெயர், முகவரி, அவர்கள் எந்த நாட்டில் வசிக்கின்றனர், வரி அடையாள எண், கணக்கில் இருப்பில் உள்ள தொகை உள்ளிட்ட தகவல்கள் இடம்பெற்றுள்ளன.

வருமான வரிக் கணக்குத் தாக்கலின்போது தங்கள் வங்கிக் கணக்கு விவரங்களை வரி செலுத்துவோர் மறைக்காமல் தெரியப்படுத்தியுள்ளார்களா என்பதை வருமான வரித்துறை அதிகாரிகள் சரிபார்க்க இந்த விவரம் உதவும். மேலும் வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாக சந்தேகம், பணமோசடி, பயங்கரவாதத்துக்கு நிதியுதவி
தொடர்பான விசாரணைகளுக்கும் அந்த விவரம் பயன்படும்.

இந்த விவரங்களில் வங்கிக் கணக்கு வாயிலான பண பரிமாற்றங்கள், டெபாசிட்டுகள், கடன் பத்திரங்கள் மற்றும் இதர சொத்துகள் மீதான முதலீடு மூலம் ஈட்டப்படும் வருவாய் உள்பட அனைத்து விதமான வருவாய் குறித்த தகவல்கள் இடம்பெறும். எனவே வருமான வரிக் கணக்கில் காட்டாமல் சொத்து வைத்திருப்பவர்கள் மீது வலுவான சட்ட நடவடிக்கை மேற்கொள்ள இந்த விவரம் உதவும்.

மேலும் இந்த விவரங்கள் பெரும்பாலும் தொழிலதிபர்கள் சம்பந்தப்பட்டதாக உள்ளது. அதில் அமெரிக்கா, பிரிட்டன், தென் கிழக்கு ஆசிய நாடுகள், சில ஆப்பிரிக்க மற்றும் தென் அமெரிக்க நாடுகளில் வசிக்கும் அயலகவாழ் இந்தியர்கள் தொடர்பான விவரங்களும் அடங்கும் என்று தெரிவித்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Read More

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக காரைக்கால் மீனவர்கள் 11 பேர் கைது!

By Web Editor January 2, 2026

மதியம் 1 மணி வரை எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?

By Web Editor January 2, 2026

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நடைபயணம் – காங்கிரஸ் புறக்கணிப்பு!

By Web Editor January 2, 2026

திமுக அரசு வாங்கிய கடனில் செலவு போக மீதம் ரூ.2.20 லட்சம் கோடி மாயமானது எங்கே? அன்புமணி கேள்வி?

By Web Editor January 2, 2026
#ट्रेंडिंग हैशटैग:AccountSwiss bankUnion Governmernt

Post navigation

Previous Previous post: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சுப்மன் கில் வீடு திரும்பினார்!
Next Next post: ராஜஸ்தான் பாஜக வேட்பாளர் பட்டியல்: முன்னாள் முதலமைச்சர் வசுந்தரா ஆதரவாளர்கள் “மிஸ்ஸிங்”!
  • About Us
  • Contact us
  • Privacy
  • Advertisement
  • YouTube
  • X
  • Instagram
  • Facebook
  • WhatsApp
© Copyright All right reserved By News7 Tamil WordPress Powered By

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading