பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்

தமிழ்நாட்டில் உள்ள நரிக்குறவர், குருவிக்காரர் சமூகத்தினரை, பழங்குடியினர் பட்டியலில் சேர்த்திட நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் மோடியிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார். இது தொடர்பாக பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், தமிழ்நாடு…

தமிழ்நாட்டில் உள்ள நரிக்குறவர், குருவிக்காரர் சமூகத்தினரை, பழங்குடியினர் பட்டியலில் சேர்த்திட நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் மோடியிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.

இது தொடர்பாக பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், தமிழ்நாடு அரசின் பரிந்துரைகளின் அடிப்படையில், “குருவிக்காரர் குழுவினருடன் இணைந்த நரிக்குறவர்” சமூகத்தினரை, தமிழ்நாட்டின் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கும் திட்டத்திற்கு இந்திய தலைமைப் பதிவாளர் ஒப்புக் கொண்டுள்ளதை சுட்டிக் காட்டியுள்ளார்.

நரிக்குறவர், குருவிக்காரர் சமூகத்தினரை பழங்குடியினர் பட்டியலில் சேர்ப்பதன் மூலம், அவர்கள் அரசமைப்பு ரீதியிலான பாதுகாப்பு மற்றும் நலத் திட்டங்களைப் பெறத் தகுதியுடையவர்கள் ஆவார்கள் எனக் கூறியுள்ளார். பல கோரிக்கைகள் அளிக்கப்பட்டிருந்தும், நரிக்குறவர், குருவிக்காரர் சமூகத்தினரை பழங்குடியினர் பட்டியலில் சேர்ப்பது நீண்ட காலமாக நிலுவையில் உள்ளது எனத் தெரிவித்துள்ளார்.

அண்மைச் செய்தி: வேளாண் நிதி நிலை அறிக்கை – எந்தெந்த திட்டத்திற்கு, எவ்வளவு நிதி

நரிக்குறவர், குருவிக்காரர் சமூகத்தினரை தமிழ்நாட்டிலுள்ள பழங்குடியினர் பட்டியலில் சேர்த்திட விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.