துறுதுறு நடிப்பு… கியூட்டான முக பாவனை… – ரசிகர்கள் கொண்டாடும் ராஷ்மிகா!

துறுதுறு நடிப்பாலும், கியூட்டான முக பாவனையாலும் பல லட்சம் ரசிகர்களை கவர்ந்திழுத்த நடிகை ராஷ்மிகா மந்தனா பிறந்த நாள் இன்று. அவரைப் பற்றி தற்போது பார்க்கலாம். சினிமாவில் மட்டும் தான் ஒரு பாடல் மூலம்…

துறுதுறு நடிப்பாலும், கியூட்டான முக பாவனையாலும் பல லட்சம் ரசிகர்களை கவர்ந்திழுத்த நடிகை ராஷ்மிகா மந்தனா பிறந்த நாள் இன்று. அவரைப் பற்றி தற்போது பார்க்கலாம்.

சினிமாவில் மட்டும் தான் ஒரு பாடல் மூலம் உச்சத்தை தொட முடியும். அப்படி ஒரு பாடல் தான் ராஷ்மிகா மந்தனாவை மொழிகளை கடந்து உச்சத்தை தொட வைத்தது. 2018 இல் விஜய் தேவரகொண்டா உடன் இணைந்து ராஷ்மிகா மந்தனா நடித்த கீதா கோவிந்தம் திரைப்படம் அவரது சினிமா பயணத்தையே மாற்றியது. அந்த படத்தில் இடம்பெற்ற ’இன்கேம் இன்கேம் இன்கேம் காவாலே’ என்ற பாடல் தெலுங்கு சினிமா ரசிகர்கள் மட்டுமல்லாமல் மற்ற மொழி ரசிகர்களையும் கவர்ந்தது.

1996 இல் கர்நாடக மாநிலம் விராஜ்பேட்டில் பிறந்த ராஷ்மிகா மாந்தனா சைக்காலஜி, ஆங்கில இலக்கியம் என பல பட்டங்களை பெற்றுள்ளார். மாடலிங்கில் அதிக ஆர்வம் இருந்ததால் படித்துக் கொண்டே சில விளம்பரங்களிலும் நடித்தார். 2016 இல் கிரிக் பார்ட்டி என்ற கன்னட படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமான ராஷ்மிகா, அஞ்சனி புத்ரா, சமக் ஆகிய கன்னட படங்களில் நடித்துள்ளார்.

இதையும் படியுங்கள் : ஐபிஎல் 2023 : டெல்லியை பந்தாடியது குஜராத் டைட்டன்ஸ்; 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி

கீதா கோவிந்தம், டியர் காம்ரேட் போன்ற வெற்றி படங்கள் மூலம் பட்டி தொட்டி எங்கும் பிரபலமான ராஷ்மிகா, அல்லு அர்ஜுன் நடித்த புஷ்பா திரைப்படத்தின் மூலம் உலக அளவில் பிரபலமானார். அதிலும் ’சாமி சாமி’ பாடல் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் ரசிக்க வைத்தது.

இப்படி தெலுங்கில் பல வெற்றிகளை கொடுத்த ராஷ்மிகா முதல் முறையாக தமிழில் விஜய்யுடன் இணைந்து நடித்த ’வாரிசு’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. வாரிசு படத்தில் இடம் பெற்ற ரஞ்சிதமே, ஜிமிக்கி பொண்ணு பாடல்கள், பட்டி தொட்டி எங்கும் ராஷ்மிகாவுக்கு ரசிகர்களை வாரிக்கொடுத்தது. தமிழ், தெலுங்கு, கன்னடம் என பிஸியாக நடித்து வரும் ராஷ்மிகா மந்தனா, மேலும் பல வெற்றிகளை குவிக்க நாமும் வாழ்த்துவோம்.

– தினேஷ் உதய், நியூஸ் 7 தமிழ்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.