ஐபிஎல் 2023 : டெல்லியை பந்தாடியது குஜராத் டைட்டன்ஸ்; 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் டெல்லி அணிக்கு எதிரான லீக் போட்டியில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் குஜராத் அணி அபார வெற்றி பெற்றது. ஐபிஎல் தொடரின் 16வது சீசன் கோலாகலமாகத் தொடங்கி நடைபெற்று வருகிறது. மொத்தம்…

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் டெல்லி அணிக்கு எதிரான லீக் போட்டியில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் குஜராத் அணி அபார வெற்றி பெற்றது.

ஐபிஎல் தொடரின் 16வது சீசன் கோலாகலமாகத் தொடங்கி நடைபெற்று வருகிறது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்றுள்ள இந்த தொடரில், ஒவ்வொரு அணியும் போட்டிகளில் வெற்றி பெற தீவிரம் காட்டி வருகின்றன. அந்த வகையில், டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியுடன் டெல்லி கேபிடல்ஸ் அணி மோதியது.

இதில் டாஸ் வென்ற குஜராத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய டெல்லி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில், 8 விக்கெட்டுகளை இழந்து 162 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக டேவிட் வார்னர் 37 ரன்களும், அக்சர் பட்டேல் 36 ரன்களும் எடுத்தனர். குஜராத் அணி தரப்பில் ஷமி மற்றும் ரஷித் கான் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினர்.

இதையும் படியுங்கள் : ஆபாசப்பட நடிகைக்கு பணம் கொடுத்த விவகாரம் : அமெரிக்க முன்னாள் அதிபர் ட்ரம்ப் கைது

இதையடுத்து 163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய குஜராத் அணி, 18.1 ஒவர்களில் 4 விக்கெட்டுகளை மட்டும் இழந்து, நிர்ணயிக்கப்பட்ட இலக்கை எட்டியது. அதிரடியாக விளையாடிய சாய் சுதர்சன், 48 பந்துகளில் 62 ரன்கள் குவித்து அணியின் வெற்றிக்கு உதவினார். இந்த வெற்றியின் மூலம் 4 புள்ளிகளுடன், புள்ளிப் பட்டியலில் குஜராத் அணி முதலிடம் பிடித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.