சென்னை ரயிலில் பட்டாக்கத்தியுடன் பயணம் செய்த கல்லூரி மாணவர்களை கைது செய்த ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னை புறநகர் ரயில் நிலையமான எண்ணூர் கத்திவாக்கம் ரயில் நிலையம் முதல் அத்திப்பட்டு ரயில் நிலையம் வரை கும்மிடிப்பூண்டி ரயில் மார்க்கத்தில் சென்னை மாநிலக் கல்லூரி மாணவர்கள் ரயிலில் இருந்து தொங்கியபடி அட்டகாசம் செய்தனர். அப்போது, ரயில் படியில் நின்றபடி பட்டாக்கத்தியை நடைமேடையில் உரசியப்படி ஆபத்தான முறையில் சென்றனர்.
இது ரயிலில் பயணம் செய்தவர்களுக்கும், வெளியில் இருந்து வேடிக்கை பார்த்தவர்களுக்கும் அச்சத்தை ஏற்படுத்தியது. இந்த காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக கொருக்குப்பேட்டை ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து சந்தேகத்துக்கிடமான நான்கு கல்லூரி மாணவர்களை கைது செய்து அவர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.








