சிவகாசி அருகே திருத்தங்கல் சீ. ரா. அரசு மேல்நிலை பள்ளியில் 4 மாணவர்கள் மது போதையில் வந்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் மது போதையில் வந்த மாணவர்களை பார்த்துள்ளார் பொது அறிவியல் பிரிவு ஆசிரியர் சண்முக சுந்தரம், அதன் படி அவர்களை கண்டித்துள்ளார்.
மேலும் அவர்களை தட்டி கேட்டு தலைமை ஆசிரியரிடம் அழைத்துச் செல்வதாக கூறியுள்ளார். அவர் பேசிக்கொண்டு இருக்கும் போது ஆசிரியர் சண்முக சுந்தரத்தை மறைத்து வைத்திருந்த மது பாட்டிலால் தலையில் தாக்கினர்.
தகவல் அறிந்த போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்துள்ளனர். நான்கு பேரில் இருவர் மது போதையில் இருந்ததும் ஆசிரியர் கடந்த ஆண்டு செய்முறை தேர்வில் மதிப்பெண்ணை குறைத்ததால் திட்டமிட்டு தாக்கியது விசாரணையில் தெரிய வந்துள்ளது







