மாணவர்களை மதிப்பெண் கொண்டு கணக்கிட கூடாது என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தார்.
மயிலாடுதுறை மாவட்டம் அறிவகம் குழந்தைகள் நல காப்பகத்தில் பிறவியிலேயே இரண்டு கைகளும் இல்லாத பெற்றோரால் கைவிடப்பட்ட மாணவி லெட்சுமி பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதி 277 மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றார். இதையடுத்து அந்த மாணவிக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வந்தனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில், மாணவி லெட்சுமியை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். மேலும் மாணவி தனது காலால் வரைந்த அமைச்சர் படத்தை பரிசாக அளித்தார். அப்போது, மாணவிக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மாவட்ட நிர்வாகம் செய்து தரும் என அமைச்சர் உறுதியளித்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஷ், இருகைகள் இல்லாமல் 12ம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி அடைந்த மாணவி லெட்சுமியின் தன்னம்பிக்கை பார்த்தாவது இனிவரும் காலத்தில் மற்ற மாணவர்கள் தன்னம்பிக்கை பெற வேண்டும். பெற்றோர்கள் பிள்ளைகளை கடினப்பட்டு வளர்ப்பதாகவும் யாரோ ஒருவருக்காக பயந்து கொண்டு சில முடிவுகள் எடுப்பது மனதிற்கு வருத்தமாக இருப்பதாக தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், இனிவரும் காலங்களில் மாணவர்களை மதிப்பெண் கொண்டு மதிப்பிடக் கூடாது எனவும் ஒவ்வொருவருக்கும் உள்ள திறமைகளை ஆசிரியர் மற்றும் பெற்றோர்கள் மற்றும் அரசு அதனை வெளிக்கொணர்வதில் கடமைப்பட்டு உள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார் .