திருமூர்த்தியை அழைத்துப் பாராட்டிய கமல்ஹாசன்

பார்வை மாற்றுத்திறனாளியான திருமூர்த்தியை அழைத்து நடிகர் கமல்ஹாசன் பாராட்டியுள்ளார். கமல்ஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் திரைப்படம் உலகெங்கும் வெற்றி நடைபோட்டு வருகிறது. இந்நிலையில், கமல்ஹாசனே எழுதிப் பாடிய பத்தல பத்தல பாடல் தமிழ், தெலுங்கு…

பார்வை மாற்றுத்திறனாளியான திருமூர்த்தியை அழைத்து நடிகர் கமல்ஹாசன் பாராட்டியுள்ளார்.

கமல்ஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் திரைப்படம் உலகெங்கும் வெற்றி நடைபோட்டு வருகிறது. இந்நிலையில், கமல்ஹாசனே எழுதிப் பாடிய பத்தல பத்தல பாடல் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் வெளியாகி ரசிகர்களிடம் மிகப்பெரிய ஹிட் கொடுத்தது. இந்த பாடலை, அண்மையில் பார்வை மாற்றுத்திறனாளியான திருமூர்த்தி, பாடி இணையத்தில் வெளியிட்டிருந்தார். அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி பலரது பாராட்டையும் பெற்றது.

அண்மைச் செய்தி: ‘கேரள மாநிலம் மலப்புரத்தில், வீட்டு விலங்கு போல் மனிதருடன் பழகும் காகங்களின் வீடியோ பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது’

இந்நிலையில், இன்று திருமூர்த்தியை நடிகர் கமல்ஹாசன் நேரில் வரவழைத்துப் பாராட்டினார். அப்போது திருமூர்த்தியின் விருப்பம் இசைக்கலைஞர் ஆகவேண்டும் என்பதைப் புரிந்துகொண்ட கமல்ஹாசன், அதற்கு உரியத் திறன்களை வளர்த்துக் கொள்ளவேண்டும் என்று திருமூர்த்திக்கு ஆலோசனை வழங்கியதாகவும், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானிடம் இது தொடர்பாகப் பேசியுள்ளார். அதனைத்தொடர்ந்து, திருமூர்த்தியை தனது இசைப்பள்ளியில் சேர்த்துக்கொள்வதாக ஏ.ஆர்.ரஹ்மான் உறுதியளித்துள்ளார். மேலும், திருமூர்த்தி இசை கற்றுக்கொள்வதற்கான முழுச் செலவையும் தானே ஏற்றுக்கொள்வதாக நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.