திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு பகுதியில், பேருந்தில் மாணவர்கள் ஆபத்தான வகையில் படியில் தொங்கிக் கொண்டு பயணம் செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
வத்தலக்குண்டு மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள கிராமங்களிலிருந்து வத்தலக்குண்டு மற்றும் பட்டிவீரன்பட்டி பள்ளிகளுக்கு மாணவர்கள் பேருந்துகளில் வந்து செல்கின்றனர். பள்ளி நேரத்தில் ஒரே பேருந்து இயக்கப்படுவதால், நூற்றுக்கணக்கான மாணவர்கள் அதில் நெரிசலுடன் பயணம் செய்கின்றனர்.
பேருந்தில் இடநெருக்கடி காரணமாக, பல மாணவர்கள் ஆபத்தான வகையில் படியில் தொங்கிக்கொண்டு பயணம் செய்கின்றனர். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. காலை மற்றும் மாலை நேரங்களில், மாணவர்களின் வசதிக்காக கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.








