கோவையில் செமஸ்டர் கட்டணம் செலுத்த பணம் இல்லாததால், கல்லூரி மாணவர்கள் செயின் பறிப்பில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கோவை மாவட்டம் சிங்காநல்லூரை அடுத்த எஸ்.ஐ.எச்.எஸ் காலணியில், இரு சக்கர வாகனத்தில் சென்றுக்கொண்டிருந்த ராஜாத்தி என்ற பெண்ணிடம் இரண்டு இளைஞர்கள் செயினை பறித்து சென்றனர். இது தொடர்பான புகாரின் பேரில், சம்பவ இடத்தில் பதிவாகியிருந்த சிசிடிவி காட்சிகள் மூலம் குற்றவாளிகளை போலீசார் தேடி வந்தனர்.
இந்நிலையில், மசக்காளிபாளையம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், சந்தேகத்திற்கு இடமாக வந்த 2 இளைஞர்களை பிடித்து விசாரித்தனர். விசாரணையில், அவர்கள் கோவையில் தனியார் கல்லூரி ஒன்றில் படித்து வரும் பிரகாஷ் மற்றும் தமிழ்செல்வன் என்பதும் கல்லூரியில் செமஸ்டர் கட்டணம் கட்ட பணம் இல்லாததால் செயின் பறிப்பில் ஈடுபட்டதும் தெரியவந்தது.
அண்மைச் செய்தி: “பாகிஸ்தானில் பெரும்பான்மையை இழந்தது இம்ரான் கான் தலைமையிலான அரசு”
இதையடுத்து இருவரையும் கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.








