ராணிப்பேட்டை உள்பட புதிதாக பிரிக்கப்பட்ட அனைத்து மாவட்டங்களிலும் தாட்கோ அலுவலகம் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அதன் தலைவர் மதிவாணன் தெரிவித்துள்ளார்.
ராணிப்பேட்டை மாவட்டம் அம்மூரில் உள்ள அரசினர் ஆதிதிராவிடர் நல தொடக்கப்பள்ளியில் தாட்கோ தலைவர் மதிவாணன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அரசு பள்ளி கட்டடத்தின் குறுக்கே தாழ்வாக இருந்த மின் வயரை உயர்த்த நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
அண்மைச் செய்தி: ‘கடும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் ’ – அமைச்சர் ஐ.பெரியசாமி எச்சரிக்கை
அதனைத்தொடர்ந்து பள்ளிக்கு வந்த மின்வாரிய ஊழியர்கள் உடனடியாக மின்வயரை சீரமைத்தனர். பின்னர் நியூஸ் 7 தமிழுக்குப் பேட்டியளித்த மதிவாணன், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் தாட்கோ மூலம் வழங்கப்படும் கடன்களை விரைந்து வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். கூட்டுறவு வங்கிகள் மூலம் தாட்கோ கடன் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.








