கூட்டுறவு கடன் சங்கங்களில், விவசாயிகள் விரும்பும் உரங்களைத் தவிர வேறு உரங்கள் மற்றும் இடுபொருட்கள் வாங்க கட்டாயப்படுத்தும் சங்க செயலாளர்கள் மீது கடும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் ஐ.பெரியசாமி எச்சரித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், உரங்களுக்கான கச்சாப்பொருட்களின் விலையேற்றம் மற்றும் இறக்குமதி பற்றாக்குறை ஆகியவை நிலவி வந்த போதிலும், தமிழ்நாட்டில் 5 லட்சத்து 3 ஆயிரத்து 521 மெட்ரிக் டன் இரசாயன உரங்கள் தொடக்க வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்கங்கள் மூலமாக விவசாயிகளுக்கு விநியோகம் செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அண்மைச் செய்தி: “செமஸ்டர் கட்டணம் செலுத்த பணம் இல்லாததால், செயின் பறிப்பில் ஈடுபட்ட மாணவர்கள் ”
மேலும் விவசாயிகள் தங்களுக்குத் தேவையான உரங்களை தொடக்க வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்கங்களில் பயிர்க்கடனில் ஒரு பகுதியாகவோ அல்லது ரொக்கமாகவோ பெற்றுக்கொள்ளலாம் எனவும், விவசாயிகள் விரும்பும் உரங்களைத் தவிர வேறு உரங்கள் மற்றும் இடுபொருட்கள் வாங்கிட கட்டாயப்படுத்தும் சங்க செயலாளர்கள் மீது கடும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.








