கழிவறையை சுத்தம் செய்ய கட்டாயப்படுத்தப்பட்ட மாணவர்கள்

பெருந்துறை அருகே உள்ள அரசு பள்ளியின் கழிவறையை, பள்ளி குழந்தைகள் சுத்தம் செய்யும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம், பெருந்துறை தாலுகாவில் உள்ள உள்ளம் முள்ளம்பட்டியில் அரசு…

பெருந்துறை அருகே உள்ள அரசு பள்ளியின் கழிவறையை, பள்ளி குழந்தைகள் சுத்தம் செய்யும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டம், பெருந்துறை தாலுகாவில் உள்ள உள்ளம் முள்ளம்பட்டியில் அரசு தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 14 பேர் மட்டுமே பயின்று வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில தினங்களாக பள்ளிக்கு முதலில் வரும் மாணவ, மாணவிகளை கழிவறை சுத்தம் செய்ய அங்குள்ள ஆசிரியைகள் நிர்ப்பந்தம் செய்ததாக கூறப்படுகிறது.

இந்த காட்சியை அங்கிருந்த ஒருவர் செல்போனில் எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ வைரலானதை அடுத்து பள்ளியில் ஆய்வு மேற்கொண்ட கல்வித்துறை அதிகாரிகள், தலைமை ஆசிரியரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.