சித்தூர் அருகே பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்த விபத்தில் 7 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம், அனந்தபூர் மாவட்டம் தர்மாவரத்தில் இருந்து சித்தூரில் நடைபெறவுள்ள திருமண நிகழ்ச்சிக்காக தனியார் பேருந்தில் 52 பேர் பயணம் மேற்கொண்டுள்ளனர். நள்ளிரவு பக்ராபேட்டா பகுதியில் சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக அருகே உள்ள பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் 7 பேர் உயிரிழந்த நிலையில், 45 பேர் படுகாயமடைந்தனர். தகவலறிந்து வந்த போலீசார் படுகாயமடைந்தவர்களை மீட்டு சித்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்து குறித்து விசாரணை நடத்திய போலீசார், ஓட்டுநரின் கவனக்குறைவால் விபத்து நடந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.








