கல்லூரி வளாகத்தில் மாணவி கழுத்தறுத்துக் கொல்லப்பட்டச் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் கோட்டயத்தில் உள்ளது செயின்ட் தாமஸ் கல்லூரி. இந்தக் கல்லூரியில், உணவுப் பதப்படுத்தும் தொழில்நுட்பப் பாடப்பிரிவில் படித்து வந்தவர் நிதினா மோல் (22). தலயோழபறம்பை சேர்ந்த இவருடன் படித்த மாணவர் அபிஷேக். இவர் வள்ளிச்சீரா பகுதி யைச் சேர்ந்தவர். இருவரும் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. பிறகு பிரிந்து விட்டனர் என்கின்றனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில், இன்று செமஸ்டர் தேர்வு நடந்தது. இருவரும் தேர்வு எழுதினர். பாதியிலே யே முடித்துவிட்டு வெளியே வந்த அபிஷேக், அங்கு மரம் ஒன்றின் அருகில் காத்திருந்தார். நிதினா தேர்வு எழுதிவிட்டு திரும்பியதும் அவருடன் அபிஷேக் வாக்குவாதத்தில் ஈடுபட் டதாகத் தெரிகிறது. பின்னர் ஆத்திரத்தில் தான் வைத்திருந்த பேப்பர் கட்டரை கொண்டு நிதினாவின் கழுத்தை அறுத்தார். இதில் ரத்த வெள்ளத்தில் அப்படியே சாய்ந்தார் நிதினா.
இதையடுத்து அக்கம் பக்கத்தினர் அவரை மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றனர். ஆனால் அவர் அதற்குள் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். பின்னர் அபிஷேக்கை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரித்து வருகின்றனர். கல்லூரி வளாகத்தில் மாணவி கழுத்தறுத்து கொடூரமாக படுகொலை செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக் கிறது.