கல்லல் கோயில் மாசிமக தேர்த் திருவிழாவில் நடந்த கோஷ்டி மோதலில் கல்லூரி மாணவனுக்குக் கத்தி குத்து விழுந்தது. இதில் படுகாயமடைந்த மாணவன் சுகந்திரன், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே கல்லலில், மாசி மக தேர்த்திருவிழா, அதனைத் தொடர்ந்து கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. இதனிடையில், நிகழ்ச்சியைக் காண வந்த கூத்தலூர் பகுதியைச் சேர்ந்த சுகந்திரன் என்பவரது தரப்பிற்கும்,கல்லல் பகுதியைச் சேர்ந்த பிரகாஷ் என்பவரது தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதாகக் கூறப்படுகிறது.
இருதரப்பினருகும் ஏற்ப்பட்ட மோதலில், சுகந்திரனின் வயிற்றில் கத்திக்குத்து விழுந்தது. இதில் படுகாயம் அடைந்த சுகந்திரன், மதுரை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.அவருடைய நண்பர் சூரிய பிரகாஷிற்கும் கத்தி குத்தால் காயம் ஏற்பட்டு, சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
மதுரை மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட மாணவன் சுகந்திரன், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மறைந்த மாணவர் சுகந்திரன், திருப்பத்தூர் கலைக் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார்.
—-சௌம்யா.மோ






