திருவாரூரில் டாஸ்மார்க் ஊழியரிடம் ரூ.8.5 லட்சத்தை கொள்ளையடித்தவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
திருவாரூர் மாவட்டம் , வீதி விடங்கன் டாஸ்மார்க் கடையில் இருந்து சனி மற்றும்
ஞாயிறுக்கிழமைகளில் நடைபெற்ற விற்பனை தொகையை, எடுத்துக் கொண்டு ஊழியர் தட்சணாமூர்த்தி, நன்னிலம் நோக்கி சென்று கொண்டிருநதார்.
அப்பொழுது, ஆற்றில் மறைந்திருந்த 3 நபர்கள் முகமூடி அணிந்து , அவரின்
இரு சக்கர வாகனத்தை மறித்து, அவரை கிழே தள்ளி தாக்கினர். மேலும், அவரிடமிருந்து
ரூ.8.5 லட்சத்தை பறித்து சென்றனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
காயம் அடைந்த தட்சணாமூர்த்தி நன்னிலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும், நன்னிலம் காவல்துறையினர் சம்பவம் குறித்து, வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.
—கு.பாலமுருகன்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement: