கிரிக்கெட்: நெஞ்சில் பந்து விழுந்ததில் மாணவர் பலி

ராமநாதபுரம் அருகே கிரிக்கெட் விளையாடியபோது நெஞ்சில் பந்து விழுந்ததில் மாணவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம், வன்னிவயல் கிராமத்தைச் சேர்ந்த பழனிக்குமார் என்பவரது மகன் சுபாஷ்குமார் (11). இம்மாணவர் அங்குள்ள…

ராமநாதபுரம் அருகே கிரிக்கெட் விளையாடியபோது நெஞ்சில் பந்து விழுந்ததில்
மாணவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம், வன்னிவயல் கிராமத்தைச் சேர்ந்த பழனிக்குமார் என்பவரது
மகன் சுபாஷ்குமார் (11). இம்மாணவர் அங்குள்ள அரசுப் பள்ளியில் 6ஆம் வகுப்பு
படித்து வந்துள்ளார். இந்நிலையில், நேற்று தனது நண்பர்களுடன் கிரிக்கெட்
விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது மாணவரின் நெஞ்சில் கிரிக்கெட் பந்து
விழுந்ததில் மாணவர் மயங்கி விழுந்துள்ளார்.

இதையடுத்து, உடனடியாக அவரை ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி
மருத்துவமனைக்கு கொண்டு வந்துள்ளனர். அங்கு மாணவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், மாணவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.
இதுகுறித்து, ராமநாதபுரம் பஜார் காவல் துறையினர் விசாரணை செய்தனர்.

இதைத்தொடர்ந்து, உறவினர்கள் சுபாஷ் குமாரின் உடலை கண்ணீர் மல்க பெற்றுக் கொண்டு அவர்களின் சொந்த ஊரான வன்னிவயலுக்கு கொண்டு சென்று அடக்கம் செய்ததாகக் கூறப்படுகிறது.

விடுமுறையில் விளையாடிக் கொண்டிருந்தபோது மாணவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.