வேலூர் மாவட்டம், குடியாத்தம் அருகே சாலையை சீரமைக்க கோரி சாலையில் நாற்று நட்டு நூதன முறையில் பெண்கள் போராட்டம் நடத்தினர்.
வேலூர் மாவட்டம் குடியாத்தத்தை அடுத்த விநாயகபுரம் பகுதியில் வேலூர் காட்பாடி சாலை இணைக்கும் கூட்ரோடு பகுதியில் பாலம் கட்டுவதற்காக கடந்த சில மாதங்களுக்கு முன்பு பள்ளம் தோண்டப்பட்டது. ஆனால் ஆமை வேகத்தில் பாலம் கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
பாலம் கட்டும் பணிகள் காரணமாக சாலை மேலும் சேதமடைந்து சேரும் சகதியும் உள்ளது. எனவே, இந்த சாலையில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் பெரும் அவதிக்கு உள்ளாகிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
ஆமை வேகத்தில் நடை பெற்று வரும் பணிகளை கண்டித்தும் அவற்றை விரைந்து முடிக்க கோரியும் அப்பகுதியை சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட பெண்கள் சாலையில் இருந்த சேற்றில் நாற்று நட்டு நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.
—ம. ஸ்ரீ மரகதம்