பாலுக்கு கொள்முதல் விலையை உயர்த்தி வழங்கக் கோரி பாஜக விவசாயிகள் அணியினர் கறந்த பாலை பாட்டிலில் எடுத்து வந்து திருப்பூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
பால் கொள்முதல் விலையை உயர்த்தக் கோரி தமிழ்நாடு முழுவதும் பால் உற்பத்தியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒருபகுதியாக திருப்பூர் மாவட்ட பாஜக விவசாயிகள் அணியினர் கறந்த பாலை பாட்டிலில் எடுத்து வந்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
மேலும் பாலின் கொள்முதல் விலையை உயர்த்த கோரியும், தரமான கால்நடை தீவனங்கள் வழங்க கோரியும் அவர்கள் கோரிக்கை வைத்தனர்.
இதையடுத்து மாவட்ட ஆட்சியர் மனுவை மட்டும் பெற்று கொண்டு, பாட்டிலை பெற்று கொள்ள முடியாது என தெரிவித்துள்ளார். இதனை அடுத்து பால் பாட்டிலை பாஜகவினர் திரும்ப எடுத்து கொண்டு சென்றனர்.
–கோ. சிவசங்கரன்







