வடமாநில தொழிலாளர்கள் விவகாரம் – பாஜக நிர்வாகிக்கு முன் ஜாமின்

பீகார் மாநில தொழிலாளர்கள் தமிழகத்தில் தாக்கப்படுவது போல் வீடியோ வெளியிட்ட டெல்லி பாரதிய ஜனதா கட்சியின் பிரமுகர்  பிரசாந்த் உம்ராவ் குமாருக்கு முன் ஜாமின் வழங்கி உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. வடமாநில தொழிலாளர்கள் தமிழ்நாட்டில்…

பீகார் மாநில தொழிலாளர்கள் தமிழகத்தில் தாக்கப்படுவது போல் வீடியோ வெளியிட்ட டெல்லி பாரதிய ஜனதா கட்சியின் பிரமுகர்  பிரசாந்த் உம்ராவ் குமாருக்கு முன் ஜாமின் வழங்கி உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

வடமாநில தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் தாக்கப்படுவது போன்ற வீடியோவை தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார் டெல்லியைச் சேர்ந்த பாஜக கட்சி பிரமுகருமும் வழக்கறிஞருமான பிரசாந்த் உம்ராவ் குமார். இந்த விவகாரம் தொடர்பாக பிரசாந்த் உம்ராவ் மீது தூத்துக்குடி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இதன் காரணமாக முன் ஜாமின் கோரி பிரசாந்த் உம்ராவ் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதி  இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கின் முந்தைய விசாரணையில், நீதிபதிகள் மனுதாரரிடம் பல்வேறு கேள்விகளை எழுப்பி இருந்தனர்.

தமிழ்நாடு அரசு தரப்பில், மனுதாரர் இது போன்ற வீடியோ வெளியிட்டதால் தமிழகத்தில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது தமிழ்நாடு அரசு விரைந்து செயல்பட்டதால் இந்த பிரச்சனை முடிவுக்கு வந்தது எனவே முன்ஜாமீன் வழங்கக் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

இருப்பினும் பிரசாந்த் உம்ராவுக்கு நிபந்தனையுடன் முன் ஜாமின் வழங்கி நீதிபதிகள் உத்தரவிட்டனர். பிரசாந்த் உம்ராவ் குமார் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் விசாரணைக்காக ஆஜராக வேண்டும், சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் 15 நாட்கள் தினமும் கையெழுத்து இட வேண்டும், மனுதாரர் இது போன்ற வேறு ஏதும் குற்ற சம்பவத்தில் ஈடுபட்டால் முன் ஜாமினை ரத்து செய்து உடனடியாக காவல்துறையினர் கைது நடவடிக்கை எடுக்கலாம்  என நிபந்தனைகளை நீதிபதிகள் விதித்துள்ளனர்.

அண்மைச் செய்தி: ஆஸ்கர் விருது பெற்ற கார்த்திகிக்கு ரூ.1 கோடி ஊக்கத்தொகை வழங்கினார் முதலமைச்சர் ஸ்டாலின்

பிரசாந்த் உம்ராவ் மீதான மற்றொரு வழக்கில்  வழக்கு விசாரணையை மார்ச் 28ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி ஜெகதீஷ் சந்திரா உத்தரவிட்டுள்ளார். மற்றொரு வழக்கில் முன் ஜாமின் கோரி பிராசாந்த் உம்ராவ் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணையில், பிரசாந்த் குமார் உம்ராவ் மீது எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்பது குறித்து பதிலளிக்க அவகாசம் வேண்டும் என்று காவல் துறை தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. கோரிக்கையை ஏற்ற நீதிபதி வழக்கு விசாரணையை ஒத்தி வைத்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.