#StopHarassment | இருசக்கர வாகனத்தில் சென்ற பெண் உதவி இயக்குநருக்கு பாலியல் சீண்டல்… போலீசார் தீவிர விசாரணை!

இரு சக்கர வாகனத்தில் சென்றுக் கொண்டிருந்த பெண் உதவி இயக்குநருக்கு மர்ம நபர் பாலியல் சீண்டல் அளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சினிமா துறையில் உதவி இயக்குநராக பணிபுரிந்து வரும் பெண் ஒருவர் சென்னை…

StopHarassment | A female assistant director who was on a two-wheeler was sexually assaulted... Police are investigating!

இரு சக்கர வாகனத்தில் சென்றுக் கொண்டிருந்த பெண் உதவி இயக்குநருக்கு மர்ம நபர் பாலியல் சீண்டல் அளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சினிமா துறையில் உதவி இயக்குநராக பணிபுரிந்து வரும் பெண் ஒருவர் சென்னை விருகம்பாக்கம் பகுதியில் வசித்து வருகிறார். இவர் நேற்றிரவு சென்னை தேனாம்பேட்டையில் பணியை முடித்து விட்டு அவரது இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது, அவர் மேற்கு மாம்பலம் வீராச்சாமி தெருவில் சென்று கொண்டிருந்த போது பின்னால் பைக்கில் வந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர், அந்த பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு விட்டு தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது.

இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண் உதவி இயக்குநர், உடனடியாக இது குறித்து அசோக் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனையடுத்து போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். அதில் ஒருபகுதியாக, சம்பவம் நடந்த பகுதியில் பதிவான சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். இந்த ஆய்வில் இக்குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட நபரின் பைக் எண்ணை போலீசார் கண்டுப்பிடித்ததாக தெரிகிறது. அதனை, வைத்து பாலியல் சீண்டலில் ஈடுபட்டவர் யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.