ஆதிச்சநல்லூரில் கண்டெடுக்கப்பட்ட பல பொருட்கள் வெளிநாடுகளில் உள்ளதாகவும், நாடாளுமன்றத்தில் வலியுறுத்தி அவற்றை மீட்பதற்கான நடவடிக்கை எடுக்க உள்ளதாகவும் மக்களவை உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு புதிய கட்ட்டங்கள் கட்டுவதற்கான பணிகள் தொடக்க விழா ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள வல்லநாடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்றது. இதில் எம்.பி கனிமொழி, அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், ஆகியோர் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கனமொழி, ஆதிச்சநல்லூரில் முதல் முறையாக நடந்த அகழாய்வு பணியில் கண்டெடுக்கப்பட்ட பல பொருட்கள் வெளிநாடுகளில் உள்ளதாக தெரிவித்தார். முதலமைச்சரிடம் கலந்தாலோசித்து நாடாளுமன்றத்தில் பேசி ஆதிச்சநல்லூர் பொருட்களை வெளிநாடுகளில் இருந்து மீட்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறிய அவர், தாமிரபரணி ஆற்றில் உள்ள கால்வாய்களை தூர்வாரும் பணிகள் தொடங்கி விட்டதாகவும் தொடர்ந்து நடைபெற உள்ளதாகவும் தெரிவித்தார்.
- பி.ஜேம்ஸ் லிசா







