வெளிநாடுகளில் இருந்து சிலைகளை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “பழனி கும்பாபிஷேகத்திற்கு ஆன்லைன் புக்கிங் மூலம் 52 ஆயிரம் பேர் சிறப்பு தரிசனம் மற்றும் பூஜைகளுக்கு அனுமதி கேட்டு விண்ணப்பித்து இருந்தார்கள். அதில் 2000 பேருக்கு தான் அனுமதி கிடைத்தது. 6000 பேர் தான் அமரும் வகையில் உள்ளது அந்த மேல்தளம். 33 அக்னி குண்டம் அமைக்கப்பட்டது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அனைத்து பிரகாரங்களுக்கும் கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது. இந்த ஆட்சி ஏற்பட்ட பின்னர், 447 கோயில்களில் குடமுழுக்கு விழா நடைபெற்று உள்ளது. 108 ஓதுவார்கள் வைத்து வேத மந்திரம், திருமுறை, கந்தசஷ்டி கவசம் ஆகியவை தமிழில் உச்சரிக்கப்பட்டன.
தமிழில் குடமுழுக்கு நடத்த நீதிமன்றம் ஒரு குழு அமைக்க அறிவுறுத்தியது. அதன்படி குழு அமைக்கப்பட்டு, அவர்கள் அது சம்பந்தமான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதுவரை 282 சிலைகள் மீட்கப்பட்டு உள்ளன. 62 சிலைகள் வெளிநாடுகளில் இருந்து மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 10 சிலைகள் சென்னையில் தொழிலதிபர் வீட்டில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. உரிய ஆவணங்களை ஒப்படைக்கும் பட்சத்தில் மீண்டும் அந்தந்த கோயில் நிர்வகாத்திடம் சிலைகள் ஒப்படைக்கப்படும்” என்று தெரிவித்தார்.