இந்தியாவில் சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் அந்நியச் செலாவணி மதிப்பைக் கணக்கில்கொண்டு, பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் ஒவ்வொரு மாதமும் எரிபொருள் விலையை மாற்றியமைத்து வருகின்றன. அந்த வகையில் மே 1-ம் தேதி தேதியான இன்று வணிக பயன்பாட்டிற்கான கேஸ் சிலிண்டர் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது.
இந்நிலையில், டெல்லியில் 19 கிலோ வணிக பயன்பாடு சிலிண்டர் ரூ.993 உயர்ந்துள்ளது. இதனால் டெல்லியில் இப்போது வணிக பயன்பாடு சிலிண்டர் ரூ.3071.50க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல சென்னையில் வணிக பயன்பாட்டிற்கான கேஸ் சிலிண்டர் விலை ரூ.990.50 உயர்ந்து ரூ.3,237-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வணிக சிலிண்டர் விலை அதிகரித்தபோதும் வீட்டு உபயோக சிலிண்டர் விலை உயர்த்தப்படவில்லை.
மேற்காசிய போரால் சிலிண்டர் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த விலை உயர்வு வியாபாரிகளுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தலைநர் டெல்லியில் ஒரு சிலிண்டரின் விலை ரூ.3,071,50 ஆகவும், கொல்கத்தாவில் ரூ.3,202க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மாநிலங்களுக்கு ஏற்ப இந்த விலை மாறுபடும்.







