உலகம் முழுவதும் உள்ள தொழிலாளர்களின் உழைப்பு, பங்களிப்பை அங்கீகரிக்கும் விதமாக ஆண்டுதோறும் மே 1ம் தேதி தொழிலாளர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று தொழிலாளர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள மே தின பூங்காவில் உள்ள தொழிலாளர் தின நினைவுச்சின்னத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.
இந்த நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், “உழைப்பால் உலகை இயக்கும் அனைவருக்கும் உழைப்பாளர் நாள் வாழ்த்துகள்!
உழைக்கும் வர்க்கத்தின் உரிமைகள் பாதுகாக்கப்பட்டு, அவர்களது சுயமரியாதையும் எதிர்காலமும் காக்கப்பட அனைவரும் துணை நிற்போம்”! இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.







