“நம்பிக்கையோடு உழைத்தால் வாழ்வில் வெற்றி பெறுவது நிச்சயம்” – எடப்பாடி பழனிசாமி ‘மே’ தின வாழ்த்து!

அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி ‘மே’ தின வாழ்த்து தெரிவித்துள்ளார்.

உலகம் முழுவதும் உள்ள தொழிலாளர்களின் உழைப்பு, பங்களிப்பை அங்கீகரிக்கும் விதமாக ஆண்டுதோறும் மே 1ம் தேதி தொழிலாளர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று தொழிலாளர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி ‘மே’ தின வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில்,

“உழைப்பில்தான் உடல் வலிமை உறுதி பெறும்; உழைப்பு மட்டுமே நம்மை உயர்த்தும்; உழைப்பின் பயனால் கிடைக்கும் உயர்வே மனநிறைவு அளிக்கும்;
நம்பிக்கையோடு உழைத்தால் வாழ்வில் வெற்றி பெறுவது நிச்சயம்!

உழைக்கும் கரங்களின் ஒற்றுமையை உணர்த்தி, உழைப்பின் பெருமையை உலகுக்கு பறை சாற்றும் தொழிலாளர் தினமாகிய ‘மே’ தினத் திருநாளில், தொழிலாளர் பெருமக்கள் அனைவருக்கும் எனது உளங்கனிந்த ‘மே’ தின நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறேன்”. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.