உலகம் முழுவதும் உள்ள தொழிலாளர்களின் உழைப்பு, பங்களிப்பை அங்கீகரிக்கும் விதமாக ஆண்டுதோறும் மே 1ம் தேதி தொழிலாளர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று தொழிலாளர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தொழிலாளர்களுக்கு மே தின வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தவெக தலைவர் விஜய் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், “உழைப்பால் உயர்வோம் என்று இரவு பகலாக உழைத்து வரும் உழைப்பாளர்களுக்கான உரிமைகள் முழுமையாக அவர்களுக்குக் கிடைக்க, உழைப்பாளர்களின் வாழ்வாதாரம் மேலும் உயர உறுதியேற்போம். உழைக்கும் கரங்களைப் போற்றுவோம்! உழைப்பாளர் தின வாழ்த்துகள்”. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




