ரூ.2 லட்சம் மதிப்பிலான நிவாரண உதவிகள்: எஸ்டிபிஐ மாநிலத் தலைவர் நெல்லை முபாரக் வழங்கினார்!

தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை எஸ்டிபிஐ கட்சியின் மாநிலத் தலைவர் நெல்லை முபாரக் பார்வையிட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார். கனமழையால் பாதிக்கப்பட்ட தென்மாவட்ட மக்களுக்கு அரசும்,  அரசியல் கட்சிகளும்,  தன்னார்வ…

தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை எஸ்டிபிஐ கட்சியின் மாநிலத் தலைவர் நெல்லை முபாரக் பார்வையிட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார்.

கனமழையால் பாதிக்கப்பட்ட தென்மாவட்ட மக்களுக்கு அரசும்,  அரசியல் கட்சிகளும்,  தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் பல்வேறு நிவாரண உதவிகளை செய்து வருகின்றன.  அந்த வகையில், தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூர்,  காயல்பட்டினம், ஏரல்,  ஆத்தூர்,  கொங்கராயன்குறிச்சி,  கேம்பலாபாத் ஆகிய பகுதிகளை எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் நேரடியாக சென்று பார்வையிட்டார்.  பின், பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ. 2 லட்சம் மதிப்பிலான போர்வை,  துண்டு,  பிரட்,  சேமியா, பிஸ்கெட்,  சமையல் பொருட்கள் அடங்கிய தொகுப்புகளை 200 நபர்களுக்கு வழங்கினார்.

அப்போது கேம்பலாபாத் பகுதிக்கு வருகை தந்த அமைச்சர் எ. வ. வேலுவை சந்தித்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரண பணிகளை அரசு துரிதப்படுத்த கோரிக்கை வைத்தார்.  மேலும் முற்றிலும் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ள ஏரல் மற்றும் ஆத்தூர் பகுதிகளில் இறப்புகள் நிகழ்ந்திருக்க வாய்ப்புள்ளதாக அப்பகுதி மக்கள் அச்சம் தெரிவிப்பதால்,  இந்த ஊர்கள் மீது அரசு அதிக கவனம் செலுத்த வேண்டும் எனவும் அமைச்சர் எ.வ.வேலுவிடம்,  எஸ்டிபிஐ கட்சியின் மாநிலத் தலைவர் நெல்லை முபாரக் கோரிக்கை விடுத்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.