முக்கியச் செய்திகள் தமிழகம்

மாநில சுயாட்சி இந்தியாவிற்கு எதிரானது அல்ல- முதலமைச்சர்

மாநில சுயாட்சி இந்தியாவிற்கு எதிரானது அல்ல முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு நாள் நிகழ்ச்சியில் கூறியுள்ளார். 

சென்னை கலைவாணர் அரங்கத்தில் தமிழ்நாடு திருநாள் விழா இன்று கொண்டாடப்பட்டது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக பங்கேற்று சிறப்புரையாற்றினார். தலைமை செயலாளர் இறையன்பு, அமைச்சர்கள் துரை முருகன், தங்கம் தென்னரசு, எம் பி சாமிநாதன், தமிழ் வளர்ச்சி துறை செயலாளர் மகேசன் காசிராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

நிகழ்ச்சியில் பேசிய தலைமை செயலாளர் இறையன்பு, மொழி என்பது வெறும் தகவல் தொடர்பு சாதனம் மட்டும் அல்ல. அது உணர்வுகளை பிரதிபலிக்கின்ற ஊடகமாக இருக்கிறது. ஒரு விஷயத்தை ஆங்கிலத்தில் சொன்னால் அது நம் உள் உணர்வில் கலப்பதை விட, தமிழில் சொன்னால் அது நம் உணர்வுகளில் கலக்கிறது. அதுதான் தாய்மொழி. தமிழ்நாடு எனும் தொடர் தொல்காப்பியம் முதல் பாரதியாரின் செந்தமிழ் நாடெனும் பாடல் வரை கலந்திருக்கிறது. தமிழ்நாடு எனும் தொடர் அசோகர் காலத்தில் இருந்தே தொடர்ந்து வந்திருக்கிறது என்று குறிப்பிட்டார்.

பின்னர் நிகழ்ச்சியில் காணொலி வாயிலாக பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எத்தனையோ விழாக்கள் நடந்திருந்தாலும், தமிழ்நாடு திருநாள் நிகழ்ச்சிக்கு ஈடு இணையே இல்லை. தமிழ்நாடு திருநாள் என்று சொல்லும் போதே ஒரு ஆற்றல் பிறக்கிறது. தமிழ்நாடு நாளில் பேசுவது என்பது எனக்கு கிடைத்த பெருமை என்றார்.

தமிழ்நாடு வாழ்க, தமிழ்நாடு வாழ்க, தமிழ்நாடு வாழ்க, என பேரறிஞர் அண்ணா தமிழ்நாடு சட்டமன்றத்தில் முழங்கியது எனது உள்ளத்தில் இருந்து நீங்கவில்லை. பல்வேறு இன்னல்கள் இருந்தும் தமிழ்நாடு என அப்போதைய நேரத்தில் சொல்ல முடியவில்லை. திமுக ஆட்சிக்கு அமர்ந்த பின் தான் தமிழ்நாடு என பெயர் சூட்டப்பட்டது. கலைஞர் கருணாநிதி மற்றும் நாவலர் போன்றவர்கள் அமைச்சர்களாக இருந்ததால் தான் தமிழ்நாடு என பெயர் வந்தது. இல்லாவிடில் உத்திர பிரதேசம், மத்திய பிரதேசம் என்பது போல தமிழ்நாடும் இன்று சென்னை பிரதேசம் என்றே அடையாள படுத்தபட்டிருக்கும்.

30க்கும் மேற்பட்ட நாடுகளில் அதிகபட்சமாகவும், 60க்கும் மேற்பட்ட நாடுகளில் குறைந்தபட்ச எண்ணிக்கையிலும் தமிழர்கள் வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் அனைவருக்கும் தமிழ்நாடு தான் தாய்நாடு. தமிழ்நாட்டில் கிமு 6ம் நூற்றாண்டிலேயே நகரமயமாக்கல் ஆரம்பிக்கபட்டது என கீழடி அகளாய்வு கூறுகிறது.

உலகில் முதலில் பிறந்த குரங்கு தமிழ் குரங்கு தான். நம்மை சிலர் கிண்டல் செய்கிறார்கள். நாம் எத்தனை சொன்னாலும் ஆய்வு மூலம் தான் சொல்கிறோம். எதையும் கற்பனை மூலம் சொல்லவில்லை. அவமானம் துடைக்கபட்ட நாள் மற்றும் தாழ்ந்து கிடந்த தமிழ்நாட்டை தலை நிமிர செய்த நாள் இந்த ஜூலை 18 தான் என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், ஒரு எழுத்துக்கு எத்தனை பிணம் வேண்டுமானாலும் தருகிறோம் என கருணாநிதி சட்டமன்றத்தில் முழங்கினார். தமிழ், தமிழன், தமிழ்நாடு என்ற உணர்ச்சியை உருவாக்கிய இயக்கம், திராவிட இயக்கம்! தமிழுக்காக தமிழினத்துக்கு போராடவும், உயிர்த்தியாகம் செய்யவும் உண்டான போராட்டம் தான் 1938ம் ஆண்டு இந்தி திணிப்பு போராட்டம்.

தமிழ்நாடு என பெயர் சூட்ட உயிர் தியாகம் செய்த அத்துணை தியாகிகளுக்கும் நாங்கள் நன்றி கடன் பெற்றுள்ளோம். உங்களால் தான் இன்று நாங்கள் தமிழ்நாட்டில் வாழ்கிறோம். இந்தியாவில் 100 சிறந்த கல்லூரிகளில் 30 மேற்பட்ட கல்லூரிகள் தமிழ்நாட்டில் உள்ள கல்லூரிகள். இந்தியாவில் தலை சிறந்த பொறியியல் கல்லூரிகளில் 16 கல்லூரிகள் தமிழகத்தில் உள்ள கல்லூரிகள் தான். இந்தியாவில் 3 வது கல்லூரி சென்னை மாநில கல்லூரி தான்.

கல்வி நிலையங்கள் அனைத்து பிள்ளைகளையும் தங்கள் சொந்த பிள்ளைகளாக அனுசரித்து பயிற்றுவிக்க வேண்டும். இல்லையென்றால் சட்டத்திற்கு முன்பு நிறுத்தப்படுவார்கள். மாநிலத்தில் சுயாட்சியை அமைவது தான் இந்தியாவின் ஒற்றுமையை காக்கும் என்று கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

’தமிழ்நாட்டின் அலங்கார வாகனம் பங்கேற்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்’ – ஓபிஎஸ்

G SaravanaKumar

ஸ்கேட்டிங் சாதனை மேற்கொண்ட இளைஞர் விபத்தில் சிக்கி உயிரிழப்பு

Arivazhagan Chinnasamy

மேகதாது விவகாரம்: அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் நாளை டெல்லி செல்லவிருப்பதாக தகவல்

Jeba Arul Robinson