மாநிலத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் B.E., B.Tech., படிப்புகளில் சேர இன்று முதல் https://tneaonline.org/ இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். வரும் ஜூலை 19 வரை மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.
பள்ளிகள் வாயிலாகவும், மாநிலம் முழுவதும் உள்ள 110 சிறப்பு உதவி மையங்கள் வாயிலாகவும் விண்ணப்பிக்கலாம். ஜூலை 20 முதல் 31 வரை சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும். ரேண்டம் எண் ஜூலை 22-ல் வெளியிடப்படும்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
ஆகஸ்ட் 8-ல் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும். இதில் ஏதும் குறைகள் இருப்பின் ஆகஸ்ட் 9 முதல் 14 வரை புகார் தெரிவிக்கலாம். பின்னர் ஆகஸ்ட் 16 முதல் அக்டோபர் 14 வரை ஆன்லைனிலேயே கலந்தாய்வு நடைபெறும்.
தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் 470-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் இளநிலை படிப்புகளில் உள்ள சுமார் 1.50 லட்சம் இடங்கள் ஆண்டுதோறும் பொது கலந்தாய்வு மூலம் ஒற்றைச்சாளர முறையில் நிரப்பப்படுகின்றன. இந்த ஆண்டு பொறியியல் கலந்தாய்வு தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் மூலம் ஆகஸ்டு 16ம் தேதி முதல் அக்டோபர் 14ம் தேதி வரை நடத்தப்படவுள்ளது. இதற்கான விண்ணப்பப் பதிவு தற்போது தொடங்கப்பட்டுள்ளது.