முக்கியச் செய்திகள் தமிழகம்

எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் படிப்பிற்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு

2021 – 2022 ஆண்டுக்கான எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் படிப்பிற்கான தரவரிசைப் பட்டியலை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று வெளியிட்டார்.

தமிழ்நாட்டில் புதிதாக துவங்கப்பட்டுள்ள 11 அரசு மருத்துவ கல்லுாரிகள் உட்பட மொத்தம் 37 அரசு மருத்துவக் கல்லுாரிகள் மற்றும் இரண்டு அரசு பல் மருத்துவக் கல்லுாரிகள் உள்ளன. இந்த மருத்துவக் கல்லுாரிகளில் 6,999 எம்.பி.பி.எஸ் இடங்கள் உள்ளன. பி.டி.எஸ்., மருத்துவ படிப்பில் 1,930 இடங்கள் உள்ளன.

இந்த நிலையில் இந்தாண்டு மாணவர் சேர்க்கைக்கு, அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு 25,511 பேர்; நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு 14,777 பேர் என மொத்தம் 40,288 பேர் விண்ணப்பித்தனர்.

இவர்களுக்கான தரவரிசை பட்டியலை, அமைச்சர் சுப்பிரமணியன் இன்று மாலை வெளியிட்டார். இதில் நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த கீதாஞ்சலி எனும் மாணவி முதலிடத்தை பிடித்தார். இதன் தொடர்ச்சியாக முதல் 10 இடங்கள் பெற்ற மாணவர்களின் பெயர்கள் வெளியிடப்பட்டன.

இதில் 10 மாணவர்களுமே சிபிஎஸ்சி வழி கல்வி பயின்ற மாணவர்களாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் தொடர்ச்சியாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, இதன் காரணமாகதான் நீட் விலக்கு கோருகிறோம் என்று அமைச்சர் விளக்கமளித்தார்.

அதேபோல 7.5 % இடஒதுக்கீட்டில் முதல் 10 இடங்களை பிடித்த மாணவர்கள் பட்டியலும் வெளியிடப்பட்டது. இதில் அறந்தாங்கி புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர் சிவா 7.5% இட ஒதுக்கீட்டின் கீழ் முதல் இடம் பிடித்துள்ளார்.

மேலும் இந்த பட்டியல் குறித்த விபரங்களை, https://www.tnhealth.tn.gov.in/, https://tnmedicalselection.net/ என்ற இணையதளங்களில் தெரிந்துக்கொள்ளலாம். அதேபோல வரும் 27ம் தேதி மாற்றுத் திறனாளிகள், முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசு, விளையாட்டு பிரிவு என சிறப்பு பிரிவு மாணவர்களுக்கும்; 28, 29ம் தேதிகளில் அரசு பள்ளி மாணவர்களுக்கும் கவுன்சிலிங் நேரடியாக நடைபெறும். பொதுப் பிரிவினருக்கான கவுன்சிலிங், 30ம் தேதி முதல் இணையவழியில் நடக்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement:
SHARE

Related posts

சென்னை தீவுத்திடலில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் திருக்கல்யாணம்

Arivazhagan CM

இலங்கையில் சமூக வலைத்தளங்கள் முடக்கம்

Saravana Kumar

தனது அறுவை சிகிச்சைக்காக ஜூஸ் விற்று நிதி திரட்டும் அமெரிக்க சிறுமி!

Gayathri Venkatesan