ஜார்ஜ் கோட்டையில் நடைபெறும்போது சட்டப்பேரவை நிகழ்ச்சிகளை நேரலை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்.
சட்டப்பேரவையில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்ப்பாடி பழனிசாமி, அனைத்து மாநகராட்சிகள், நகராட்சிகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
தொடர்ந்து, சட்டப்பேரவை நிகழ்ச்சிகளை நேரலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், காவல்துறையினருக்காக உங்கள் இல்லம் திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
இதற்கு பதிலளித்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 10 ஆண்டுகாலம் ஆட்சியில் இருந்த தாங்கள், சிசிடிவி கேமராக்கள் பொருத்த நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறினார்.
ஜார்ஜ் கோட்டையில் நடைபெறும்போது சட்டப்பேரவை நிகழ்ச்சிகள் ஒளிபரப்பு செய்யப்படும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். கடந்த ஆட்சியில் கொண்டுவரப்பட்ட உங்கள் இல்லம் திட்டத்தில் கட்டப்பட்ட வீடுகள் தரமாக இல்லை என குற்றம்சாட்டிய முதலமைச்சர் முக.ஸ்டாலின், தாங்கள் கொண்டு வந்த திட்டம் என்பதற்காக, அதனை கைவிட மாட்டோம் என உறுதி அளித்தார்.







