முக்கியச் செய்திகள் உலகம் இந்தியா தமிழகம்

இலங்கை கனமழையில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது!

இலங்கையில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையினால் நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது.

இலங்கையில் கடந்த சிலதினங்களாக பெய்து வரும் கனமழையால் களனி, தெதரு, களு ஆகிய ஆறுகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அணைகளில் இருந்து அதிக அளவில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால், ஆறுகள் பயணிக்கும் கம்பா, ரத்னபுரா, கொழும்பு, பட்டாளம், கலுட்ரா உள்ளிட்ட 10 மாவட்டங்கள் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளது. இதன் காரணமாக இந்த மாவட்டங்களின் அனைத்து பகுதிகளும் வெள்ளக்காடாய் காட்சியளிக்கிறது.

இந்த மழையின் காரணமாக 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்த 2 லட்சத்து 45 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் வீடுகளை இழந்த 3ஆயிரத்து 500 குடும்பங்களை சேர்ந்தவர்களை மீட்டு, 72 நிவாரண முகாம்களில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் பேரிடர் மீட்பு குழுவின் தலைமை அதிகாரி மேஜர் ஜெனரல் சுதானந்தா ரனசிங்கே தெரிவித்துள்ளார்.

இதனிடையே வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது. மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ராணுவம் மற்றும் கப்பல்படையினர் போர்கால அடிப்படையில் மீட்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். தொடர்ந்து சில தினங்களுக்கு கனமழை பெய்யும் என அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ள நிலையில், பல இடங்களில் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Advertisement:

Related posts

பள்ளிகள் திறந்தவுடன் மாணவர்கள் எப்படி இருக்க வேண்டும்: பள்ளிக்கல்வித்துறை புதிய அறிவிப்பு!

Saravana

“அரசாங்கத்தின் அதிகாரங்கள் மக்களை காக்கவே பயன்பட வேண்டும்”: வெற்றிமாறன்

Jeba

காங்கேயத்தில் கால்நடைப் பூங்கா அமைக்கப்படும்: முதல்வர் பழனிசாமி

Niruban Chakkaaravarthi