முக்கியச் செய்திகள் தமிழகம்

சென்னை புறநகர் ரயில் சேவை அதிகரிப்பு!

தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு சற்று குறையத் தொடங்கியுள்ள நிலையில் புறநகர் மின்சார ரயில் சேவை அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பில் தமிழ்நாடு முதல் இடத்தில் உள்ள நிலையில், தற்போது தொற்று பாதிப்பு சற்று குறையத் தொடங்கியுள்ளது. இதனைத் தொடர்ந்து தற்போது சில தளர்வுகளை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இதன் காரணமாக புறநகர் மின்சார ரயில் சேவை அதிகரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து சென்னை ரயில்வே கோட்டம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மூர்மார்க்கெட், ஆவடி, திருவள்ளூர், அரக்கோணம், திருத்தணி மார்கத்தில் 97 மின்சார ரயில் சேவை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சென்னை கடற்கரை-வேளச்சேரி மார்கத்தில் 34 ரயில் சேவையும், கடற்கரை, தாம்பரம், செங்கல்பட்டு, திருமால்பூர் மார்கத்தில் 88 ரயில் சேவையும் என மொத்தமாக 208 மின்சார ரயில் சேவை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆவடி – பட்டாபிராம் மிலிட்டரி சைட்டிங் மார்கத்தில் 4 மின்சார ரயில் சேவையும், பட்டாபிராம்-பட்டாபிராம் மிலிட்டரி சைட்டிங் மார்கத்தில் 8 ரயில் சேவை என மொத்தமாக 279 புறநகர் மின்சார ரயில்கள் இயக்கப்படும் என சென்னை ரயில்வே கோட்டம் தெரிவித்துள்ளது.

தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மக்களுக்கு பயன்படும் வகையில் ரயில் சேவை அதிகரிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே கோட்டம் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement:

Related posts

கைதிகளுக்கு முன்கூட்டியே விடுதலை: சிறைத் துறை பதிலளிக்க உத்தரவு!

Ezhilarasan

அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த எத்தனை ஆண்டுகள் ஆகும்?

சென்னை வந்தது 6 லட்சம் கோவிஷீல்டு!

Karthick