முக்கியச் செய்திகள் இந்தியா

கடந்த 2 மாதத்தில் இல்லாத அளவில் குறைந்தது கொரோனா பாதிப்பு!

நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 லட்சமாக பதிவாகியுள்ளது. கடந்த 2 மாத்தில் இருந்த தொற்று பாதிப்பு தற்போது குறையத்தொடங்கியுள்ளது.

நேற்றைய தினம் 1.14 லட்சம் புதிய கொரோனா நோயாளிகள் அடையாளம் காணப்பட்டிருந்த நிலையில் இன்றைய நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 1,00,636 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. அதே போல 1,74,399 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 2,427 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

இதுவரை 36,63,34,111 பரிசோதனைகளும், கடந்த 24 மணி நேரத்தில் 15,87,589 பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு ஒட்டுமொத்த எண்ணிக்கை 2,89,09,975 ஆக அதிகரித்துள்ளது. இதில் 2,71,59,180 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 14,01,609 பேர் சிகிச்சையில் உள்ளனர். 3,49,186 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவில் இதுவரை 23,27,86,482 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. தற்போது தொற்று பாதிப்பு குறையத் தொடங்கியுள்ள நிலையில் மகாராஷ்டிரா, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்கள் சில தளர்வுகளை அறிவித்துள்ளது. ஆனால், ஹரியானா, சிக்கிம் உள்ளிட்ட பகுதிகளில் ஜூன் 14 வரை ஊரடங்கு நீட்டிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement:

Related posts

மறுக்கப்பட்ட கல்விக் கடன்: மதுரை மாணவி தற்கொலை

Gayathri Venkatesan

மருத்துவ சுற்றுலாவுக்கு ரஷ்யா அழைப்பு!

Hamsa

10 வயது சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த 9 பேர் கைது!

Jeba