காரைக்கால் ஸ்ரீதங்க மாரியம்மன் கோயில் தீமிதி திருவிழா!

காரைக்காலை அடுத்த தலத்தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ தங்க மாரியம்மன் கோயில் தீமிதி திருவிழாவில், 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் தீ மிதித்து  நோ்த்திக்கடன் செலுத்தினர். புதுச்சேரி மாநிலம் காரைக்கால் அடுத்த தலத்தெருவில் பழமை வாய்ந்த ஸ்ரீதங்கமாரியம்மன்…

காரைக்காலை அடுத்த தலத்தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ தங்க மாரியம்மன் கோயில் தீமிதி திருவிழாவில், 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் தீ மிதித்து  நோ்த்திக்கடன் செலுத்தினர்.

புதுச்சேரி மாநிலம் காரைக்கால் அடுத்த தலத்தெருவில் பழமை வாய்ந்த ஸ்ரீதங்கமாரியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலின் சித்திரை திருவிழா கொடியேற்றம்  கடந்த 23-ம் தேதி  விக்னேஸ்வர பூஜையுடன் துவங்கிய நிலையில், விழாவின் முக்கிய நிகழ்ச்சி நாளான தீமிதி திருவிழாவிவை முன்னிட்டு வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் ஸ்ரீ தங்க மாரியம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்து, ஆலயத்திலிருந்து மங்கள வாத்தியங்கள் முழங்க பூங்கரகம் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது.

பின்னர் ஆலயத்தின் அருகில் அமைக்கப்பட்டிருந்த அக்னி குண்டத்தில் பூங்கரகம் முதலில் இறங்கியது. அதனைத் தொடர்ந்து காரைக்கால் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட ஆண், பெண் பக்தர்கள் தீ மிதித்து அம்மனுக்கு தங்களின்
நேர்த்திக்கடனை செலுத்தினர்.

 

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.