விருதுநகர் அருகே மீசலூரில் தொழிலாளர் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற கிராம சபை கூட்டத்திற்கு வருகை தந்த மாவட்ட ஆட்சியர் ஜெயசீலனை தமிழக பாராம்பரிய முறைப்படி கோலாட்டம் அடித்து குழந்தைகள் வரவேற்றனர்.
தமிழகம் முழுவதும் தொழிலாளர் தினமான மே 1ம் தேதி ஊராட்சி மன்றங்களில் கிராம
சபை கூட்டம் நடைபெறும் என தமிழக அரசு அறிவித்த நிலையில் விருதுநகர் அருகே உள்ள மீசலூர் ஊராட்சி மன்றத்தில் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் தலைமையில் கிராம சபை கூட்டம் நடை பெற்றது. இதில் கலந்து கொள்ள வந்த மாவட்ட ஆட்சியரை அந்த பகுதி குழந்தைகள் தமிழக பாராம்பரிய முறைப்படி கோலாட்டம் அடித்து வரவேற்றனர்.
மேலும், பொது சுகாதாரம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை கால்நடை துறை, வேளாண்மை துறை உள்ளிட்ட பல்வேறு அரசு துறைகளை சார்ந்த அரசு அலுவலர்கள் தங்கள் துறைகளின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து பொதுமக்களுக்கு எடுத்துரைத்தனர்.
மேலும் இந்த கிராம சபை கூட்டரங்கில் பொது சுகாதாரம் மற்றும் மக்கள்
நல்வாழ்வுத்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம், வேளாண்மைத்துறை
உள்ளிட்ட பல்வேறு துறைகள் மூலம் அரசின் திட்டங்கள் குறித்து கண்காட்சி
அரங்குகள் அமைக்கப்பட்டு இருந்தது
மேலும் எங்கள் கிராமம், எழில் மிகு கிராமம் என்ற தலைப்பில், தூய்மை விழிப்புணர்வு, குப்பைகளை தரம் பிரித்து வழங்குதல், சுற்றுப்புற தூய்மையை பராமரித்தல், துணி பைகளை உபயோகப்படுதல் உள்ளிட்டவை குறித்து விழிப்புணர்வு உறுதிமொழி எடுக்கப்பட்டது. இந்த கிராம சபை கூட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் கிராம பொதுமக்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
—-ம. ஶ்ரீ மரகதம்







