இந்தியாவுக்கு எதிரான தொடருக்காக இலங்கை கிரிக்கெட் அணிக்கு புதிய கேப்டன் நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த 4 வருடங்களில் நியமிக்கப்பட்டுள்ள பத்தாவது கேப்டன் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஷிகர் தவான் தலைமையிலான இந்திய 2-ம் தர கிரிக்கெட் அணி, இலங்கை சென்றுள்ளது. அங்கு மூன்று ஒரு நாள் மற்றும் மூன்று டி- 20 தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது. முதல் ஒரு நாள் போட்டி, கடந்த 13 ஆம் தேதி தொடங்க இருந்தது. இங்கிலாந்து சுற்றுப்பயணத்தை முடித்து விட்டு திரும்பிய இலங்கை அணியில், பயிற்சியாளர் கிராண்ட் ஃபிளவர் உட்பட 2 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டதால், இந்த தொடர் தள்ளி வைக்கப்பட்டு நாளை ஆரம்பமாகிறது.
இதற்கான இலங்கை கிரிக்கெட் அணி நேற்று அறிவிக்கப்பட்டது. காயம் காரணமாக, தற்போதைய கேப்டன் குசல் பெரேரா, விலகியுள்ளார். புதிய கேப்டனாக தசுன் ஷனகா நியமிக்கப்பட்டிருக்கிறார். கடந்த 4 வருடங்களில் நியமிக்கப்பட்டுள்ள 10 வது கேப்டன் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கை:
தசுன் ஷனகா (கேப்டன்) தனஞ்ஜெயா டி சில்வா, அவிஷ்கா பெர்னாண்டோ, பனுகா ராஜபக்சே, பதும் நிசாங்கா, சரித் அசலன்கா, வனிந்து ஹசரன்கா, அஷென் பண்டாரா, மினோத் பனுகா, லஹிரு உதரா, ரமேஷ் மெண்டிஸ், சமிகா கருணாரத்னே, துஷ்மந்தா சமீரா, லக்சன் சண்டகன், அகிலா தனஞ்ஜெயா, ஷிரன் பெர்னாண்டோ, தனஞ்ஜெயா லக் ஷன், இஷான் ஜெயரத்னே, பிரவீன் ஜெயவிக்ரமா, அசிதா பெர்னாண்டோ, கசுன் ரஜிதா, லஹிரு குமரா, இசுரு உதனா.
இந்தப் போட்டிக்காக இந்திய வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.







