நாகை அரசு மருத்துவமனைக்கு உபகரணங்கள் வழங்கிய முன்னாள் மாணவர்கள்

நாகை தேசிய மேல்நிலைப்பள்ளியின் முன்னாள் மாணவர்கள் இணைந்து அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு ரூ.50,000 மதிப்பிலான மருத்துவ உபகரணங்களை வழங்கினர். நாகை தேசிய மேல்நிலைப்பள்ளியில் 40 ஆண்டுகளுக்கு முன் படித்த மாணவர்கள் நாகை அரசு மருத்துவக்கல்லூரி…

நாகை தேசிய மேல்நிலைப்பள்ளியின் முன்னாள் மாணவர்கள் இணைந்து அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு ரூ.50,000 மதிப்பிலான மருத்துவ உபகரணங்களை வழங்கினர்.

நாகை தேசிய மேல்நிலைப்பள்ளியில் 40 ஆண்டுகளுக்கு முன் படித்த மாணவர்கள் நாகை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சந்தித்துள்ளனர். 1978 முதல் 1980-ம் ஆண்டு வரை பயின்ற மாணவர்கள் சந்தித்த இந்த நிகழ்வில் 50 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான மருத்துவ உபகரணங்களை மருத்துவமனைக்கு இலவசமாக வழங்கினர்.

ஆட்சியர் அருண் தம்புராஜ் உடன் முன்னாள் மாணவர்கள்

கட்டில், சக்கர நாற்காலி மற்றும் படுக்கை உள்ளிட்ட உபகரணங்கள் மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜிடம் வழங்கப்பட்டன. உபகரணங்களை பெற்றுக்கொண்ட ஆட்சியர் அருண் தம்புராஜ், முன்னாள் மாணவர்களுக்கு பாராட்டுகளை தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.