அரவக்குறிச்சியில் முருங்கை விளைச்சல் அதிகரிப்பால் விலை கடும் வீழ்ச்சியடைந்துள்ளது. இதனால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சுறு்றுவட்டார பகுதியில் கால்நடை வளர்ப்பு தொழிலுக்கு அடுத்தப்படியாக முருங்கை விவசாயம் உள்ளது. இங்கு கொடி முருங்கை, செடி முருங்கை, மூலனுார் முருங்கை என பல்வேறு வகையான முருங்கை வளர்க்ப்பட்டு வருகிறது. இப்பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கரில் முருங்கை சாகுபடி நடைபெற்று வருகிறது.
கன்று 40 ரூபாய்க்கு சந்தையில் விற்கப்படுகிறது. கடந்த டிசம்பரம் மாதம் இறுதியில் முருங்கைகாய்கள் விளைச்சால் குறைவாக இருந்ததால் கிலோ நுாறு ரூபாய்க்கு மேல் விற்கப்பட்டது. பின்னர் மார்ச் முதல் முருங்கை சீசன் தொடங்கியது. தற்போது முருங்கை உற்பத்தி அதிகமானதால் 1 கிலோ ஒரு முருங்கை ரூ.3 முதல் ரூ.10 வரை விலை போகிறது. தற்போது முருங்கை விலை குறைந்துள்ளதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
—அனகா காளமேகன்







