இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 12 தமிழ்நாட்டு மீனவர்களை விடுதலை செய்யக்கோரியும், 109 படகுகளை விடுவித்திட கோரியும் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்ஷங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
தமிழ்நாடு மற்றும் காரைக்காலை சேர்ந்த 12 இந்திய மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். இலங்கை கடற்படையினரின் இத்தகைய செயல்களை கட்டுப்படுத்திடவும், மீனவர்களின் மீன்பிடி படகுகளை விடுத்திட கோரியும் மத்திய அமைச்சர் ஜெய்ஷங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், கடந்த 1ம் தேதி மயிலாடுதுறையை சார்ந்த 5 மீனவர்கள், புதுச்சேரி, காரைக்காலை சார்ந்த 5 மீனவர்கள், நாகப்பட்டினம் மாவட்டத்தை சார்ந்த 2 மீனவர்கள் என மொத்தம் 12 பேர் நேற்றைய தினம் (5ம் தேதி) கிழக்கு கோடியக்கரை பகுதியில் மீன்பிடித்து கொண்டிருந்த போது இலங்கை கடற்படையினர் அவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் அடிக்கடி தாக்குதல் நடத்துவதை தடுக்கக் கோரியும் இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்ட 12 மீனவர்களையும் 109 படகுகளையும் விடுவித்திட உரிய தூதரக நடவடிக்கைகளை எடுக்க வலியுறுத்தியும்
1/2 pic.twitter.com/mkpWSrp1em
— CMOTamilNadu (@CMOTamilnadu) April 6, 2023
இந்த தாக்குதலில் 4 மீனவர்களின் கைகளில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும், தாக்குதலுக்கு உள்ளான மீனவர்களுக்கு சொந்தமான 7 செல்போன்கள் மற்றும் மீன்களை இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்துள்ளனர் என கடித்தத்தில் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்நாடு மற்றும் காரைக்காலை சேர்ந்த மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்திய மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தொடர்ந்து தாக்குதல் நடத்துவதை கட்டுப்படுத்திடவும், எதிர்க்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருப்பதை உறுதி செய்யும் வகையில் உரிய நடவடிக்கைகளை இந்திய அரசு மேற்கொள்ள கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.
மேலும் இலங்கை அரசின் வசம் உள்ள 12 மீனவர்கள் மற்றும் 109 மீன்பிடி படகுகளையும் உடனடியாக விடுவித்திட தூதரக நடவடிக்கைகளை மத்திய வெளியுறவுத்தறை அமைச்சர் மேற்கொள்ள வேண்டும் என்று முதலமைச்சர் கடித்தில் கேட்டுக் கொண்டுள்ளார்.