ஆஸ்திரேலியா-இலங்கை அணிகளுக்கு இடையிலான 4ஆவது ஒரு நாள் ஆட்டத்தில் இலங்கை அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
அத்துடன் 5 ஒரு நாள் ஆட்டங்கள் கொண்ட தொடரை 3-1 என்ற கணக்கில் இலங்கை கைப்பற்றியது. 3 டி20, 5 ஒரு நாள், 2 டெஸ்ட் ஆட்டங்களில் விளையாட ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி இலங்கைக்கு சுற்றுப் பயணம் சென்றுள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
3 டி20 ஆட்டங்கள் கொண்ட தொடரை 2-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா கைப்பற்றியது. இதையடுத்து, கடந்த 14ம் தேதி ஒரு நாள் போட்டிகள் தொடங்கியது. முதல் ஒரு நாள் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா அணி டிஎல்எஸ் முறையில் 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இரண்டாவது மற்றும் மூன்றாவது ஒரு நாள் ஆட்டங்களில் இலங்கை அணி வென்றது. நேற்று நடைபெற்ற நான்காவது ஒரு நாள் ஆட்டத்தில், ஆஸ்திரேலிய அணி டாஸ் வென்று பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
இதையடுத்து முதலில் விளையாடிய இலங்கை 49 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 258 ரன்கள் எடுத்தது. அசலங்கா 110 ரன்கள் எடுத்தார். கேப்டன் ஷனகா 4 ரன்கள் எடுத்தார். தனஞ்செய டி சில்வா அரை சதம் பதிவு செய்தார். ஆஸ்திரேலியா சார்பில் கம்மின்ஸ், குனேமன், மிட்செல் மார்ஷ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். மேக்ஸ்வெல் 1 விக்கெட்டை வீழ்த்தினார்.
இதையடுத்து, விளையாடிய ஆஸ்திரேலிய அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 254 ரன்கள் எடுத்தது. டேவிட் வார்னர் 99 ரன்கள் எடுத்திருந்தபோது தனஞ்செய டி சில்வா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். கேப்டன் ஆரோன் ஃபின்ச் “டக்” அவுட் ஆனார். பட் கம்மின் 35 ரன்கள் எடுத்தார். எனினும், இலங்கையின் சிறந்த பந்துவீச்சால் ஆஸ்திரேலிய அணி 254 ரன்களில் சுருண்டது. ஆட்ட நாயகனாக சதம் பதிவு செய்த அசலன்கா தேர்வு செய்யப்பட்டார்.
இரு அணிகளுக்கு இடையிலான கடைசி ஒரு நாள் ஆட்டம், வரும் 24ம் தேதி கொழும்பில் நடைபெறவுள்ளது.
-மணிகண்டன்