திருச்செந்தூரில் 2 கோடி ரூபாய் மதிப்பிலான திமிங்கலத்தின் எச்சத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூருக்கு ஒருவித விலையுர்ந்த பொருளை கடத்திவரப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து தனிப்படை போலீசார் தாலுகா ஆபீஸ் ரோட்டில் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது சந்தேகத்திற்கு இடமான வந்த ஒரு காரை போலீசார் சோதனையிட்டபோது அதில் மெழுகு போன்ற பொருளை பையில் மறைந்து எடுத்துவந்தது தெரியவந்தது. இதனை அடுத்து காரில் வந்த 6 பேரிடம் விசாரணை மேற்கொண்டபோது, மறைந்து எடுத்துவந்த பொருள் திமிங்கலம் வாயிலிருந்து உமிழக்கூடிய அம்பர்கீரிஸ் என்பது தெரியவந்தது.

மேலும், வாசனை திரவியம் தயாரிப்பதற்கு பயன்படுத்தப்படும் இந்த பொருளை இலங்கை, இந்தோனேசியா, இங்கிலாந்து போன்ற நாடுகளுக்கு விற்பனை செய்வதற்காக கடத்தி வந்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து 6 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்த 2 கிலோ எடை கொண்ட 2 கோடி ரூபாய் மதிப்பிலான அம்பர்கீரிசை பறிமுதல் செய்தனர். மேலும் பறிமுதல் செய்யப்பட்ட அம்பர்கீரிசை திருச்செந்தூர் வனத்துறையிடம் போலீசார் ஒப்படைத்தனர்.







