ஒரு கோடியை நெருங்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி!

நாடு முழுவதும் நேற்று ஒரே நாளில் 86 லட்சத்து 16 ஆயிரத்து 373 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், நாடு முழுவதும் ஒரே நாளில் 16 லட்சத்து…

நாடு முழுவதும் நேற்று ஒரே நாளில் 86 லட்சத்து 16 ஆயிரத்து 373 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், நாடு முழுவதும் ஒரே நாளில் 16 லட்சத்து 64 ஆயிரத்து 360 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று படிப்படியாக குறைந்துவரும் நிலையில், கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 42 ஆயிரத்து 640 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நோய்த் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் புதிதாக ஆயிரத்து 167 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், பலியானோரின் மொத்த எண்ணிக்கை 3 லட்சத்து 89 ஆயிரத்து 302ஆக அதிகரித்துள்ளது.

அதேநேரத்தில், கொரோனா தொற்றில் இருந்து, மேலும் 81 ஆயிரத்து 839 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். நேற்று ஒரே நாளில் 86 லட்சத்து 16 ஆயிரத்து 373 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக, மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.